நான் டீ கடைக்கு டீ போட போய்டுவேன்..! என் வீட்டுக்கு என் நண்பன் என் மனைவி கூட பேச போய்டுவான்..! ஆனால்..? சென்னை பரபரப்பு!

நிலம் வாங்கி தருவதாக கூறி வாலிபர் ஒருவர் கூலி தொழிலாளி குடும்பத்தை ஏமாற்றியுள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை போரூரில் அமைந்துள்ள அம்பாள் நகருக்கு உட்பட்ட ரோஜா தெருவில் கேசவன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 38. இவருடைய மனைவியின் பெயர் கனகலட்சுமி. இவருக்கும் அக்ஷயா என்ற 12 வயது மகளும், மோனிஷா என்ற 8 வயது மகளும் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தனர். கேசவன் அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்துள்ளார். தினமும் காலை 6 மணிக்கு கடைக்கு செல்லும் கேசவன் நள்ளிரவில் தான் வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று மாலை நேரத்தில் தன்னுடைய இரு மகள்களையும் டியூஷனில் சேர்த்துள்ளார். அன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியையும், மகள்களையும் காணாததை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தில் அவர்களை குறித்து விசாரித்த போதும் அவருக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.

மறுநாளன்று ஐயப்பன்தாங்கல் காவல்நிலையத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகளை காணவில்லை என்று புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேசவன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை தேடித்தருமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளார். கேசவன் மற்றொரு புகாரில், "சில மாதங்களுக்கு முன்னர் மதுரவாயலில் சேர்ந்த முல்லை விவேக் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் ஒரு நிலத்தரகர் என்றும், குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி என்னுடைய வீட்டிற்கு அறிமுகமானார்.

கேசவன் வீட்டிலில்லாத நேரத்தில் கனகலட்சுமியை விவேக் சந்தித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பரிசுகள் வழங்குவது, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது என்று அவரை மயக்கியுள்ளார். பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த 10 லட்சம் ரூபாயுடன் கனகலட்சுமி,விவேக் மற்றும் குழந்தைகள் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் கேசவன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.