கத்திரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரித்துக்கொள்ளலாம்!

கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.


கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை  கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம்  குறையும்.

கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது.  கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.