கோவிலில் திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் ஏறிய மணமக்கள்! ஊரே கூடி வியந்த காரணம் என்ன தெரியுமா?

நம்ம ஊரு 90’s கிட்ஸ் பழமையை விரும்பும் வினோதமாக மக்கள். அந்த வகையில் சற்று வித்தியாசமாக நம்ம பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே அனைவரியும் ஈர்க்கும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி பலரின் கவனத்தை கவர்ந்து இணையத்தில் உலா வருகின்றனர்.


21வது நூற்றாண்டில் திருமணம் என்றாலே ஆடம்பரம், சொகுசு காரில் ஊர்வலம், மின்விளக்கு அலங்காரம் போன்றவற்றுக்கு மிகவும் முக்கியவாந்தாக கருதுவார்கள். இவர்களின் மத்தியில் சற்று வினோதமாக ஒரு சிலர் பழமையையும், பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்போது அது பலரின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்து உள்ளது. கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் சுபாசினி . இவர் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் பரணி பிரகாஷ் .

இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் பெற்றோர்களின் முன்நிலையில் நிச்சயிக்கப்பட்டு, பரணி பிரகாசுக்கும், சுபாசினிக்கும் கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. 

திருமணம் முடிந்ததும் கூகலூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சி வைக்கப்பட்டுள்ளது. அப்போது மணமக்களை அழைத்து செல்ல மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டது. இதில் மணமக்கள் ஏறி உட்கார்ந்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமண மண்டபத்துக்கு மணமக்கள் சென்றனர். இதனை தொடர்ந்து மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். 

இந்த புதுவிதமான நிகழ்ச்சியினை குறித்து மணமகளிடம் கேட்ட போது, ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். காரை அன்னாந்து பார்த்த காலம் போயி, மாட்டு வண்டியை அன்னாந்து பார்க்கும் நிலையில் நாம் அனைவரும் உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.