மணமகனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மணமகளின் தாய்..! திருமண வீட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

மணமகனின் தந்தையும், மணமகளின் தாயாரும் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்னர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவமானது சூரத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"ஹம் ஆப்கே ஹைன் கோன்" என்ற பாலிவுட் திரைப்படத்தில் 2 இளைஞர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. மணமகனின் தந்தையும், மணமகளின் தாயாரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அப்போது மணமகனின் தந்தைக்கு அவர் மீது ஒரு பார்வையை இருந்துள்ளது. ஆனால் யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்து விட்டார். அதன் பின்னர் அதே கல்லூரியில் சேர்ந்த மற்றொருவரை மணமகளின் தாயார் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிள்ளைகளின் திருமணத்தின்போது மணமகளின் தந்தை தன் மனைவியிடம், மணமகனின் தந்தை பல வருடங்களுக்கு முன்னர் மனதில் வைத்திருந்த காதலை தெரிவிக்கிறார்.

இதேபோன்று குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 2 இளைஞர்களுக்கு திருமணமானது பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 10 நாட்களுக்கு முன்னர் 48 வயதான மணமகனின் தந்தையும், 46 வயதான மணமகளின் தாயார் காணாமல் போயுள்ளனர்.  இந்த சம்பவமானது இரு குடும்பத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனென்றால், இருவருமே சிறுவயதிலிருந்தே கத்தர்கம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போதிலிருந்தே இருவரது குடும்பத்தினரும் நன்கு பரிச்சயமாகி இருந்தனர். இருவரும் திருமணமான பிறகும் தகாத உறவில் சில முறை ஈடுபட்டிருந்தனர்.

மணமகளின் தாயார் வைர ஆசாரியுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மணமகனின் தந்தையின் பெயர் ராகேஷ். இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

இருவரும் திடீரென்று 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளனர். இரு குடும்பத்தினரும் காணாமல் போன இருவரையும் தேடித் தருமாறு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பெற்றோரின் கீழ்த்தரமான செயலினால் பிள்ளைகளின் திருமணம் நின்றுள்ள சம்பவமானது சூரத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.