கொரோனா வைரஸால் விசா தட்டுப்பாடு ஏற்பட்டதில் மணமகன் திருமணத்தில் கலந்து கொள்ளாத சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரானாவால் விமானம் கேன்சல்! மாப்பிள்ளை வராமலேயே திருமணம் செய்து கொண்ட இளம் பெண்! எப்படி தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 7300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது அட்னான் கான். இவர் கடந்த 5 வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனிடையே சவுதி அரேபியாவிலிருந்து முஹம்மது அட்னான் கானின் குடும்பத்தினர் சென்னைக்கு வருவதற்கு சிரமங்கள் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக சவுதி அரேபியா நாட்டு அரசாங்கம் விமான நிலையத்தை முழுவதுமாக முடக்கியது. இதனால் மணமகன் குடும்பத்தினரால் சரியான நேரத்திற்கு இந்தியா வந்தடைய இயலவில்லை.
ஆதலால் வேறு வழியின்றி இருவீட்டாரும் இணைந்து திருமணத்தை சமூக வலைத்தளம் மூலம் நடத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படி கையொப்பம் மற்றும் இதர சம்பிரதாயங்கள் ஆன்லைன் மூலமே முடிவடைந்தன.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.