தாலி கட்டும் அவசரம்! அதிவேகத்தில் கார் ஓட்டிய மாப்பிள்ளை! அடித்து தூக்கியதில் ஒருவர் பலி! கல்யாணம் நின்ற பரிதாபம்!

வேகமாக வந்துக்கொண்டிருந்த கார் மோதி துப்புரவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் மேலமடை எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக ஜெகநாதன் வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது கோமதிபுரத்துக்கு அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக சைக்கிளில் வந்த துப்புரவு தொழிலாளி மீது மோதிவிட்டார்.

இந்த விபத்தில் சைக்கிளில் வந்த துப்புரவு தொழிலாளி கடுமையாக காயமடைந்தார். பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜெகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் ஜெகநாதனின் திருமணமானது  நின்று போயுள்ளது. விபத்துக்கான சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவமானது கோமதிபுரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.