எனக்கு நீ தாலி கட்டக்கூடாது..! மணமேடையில் கடைசி நொடியில் மணப்பெண் செய்த செயல்..! அதிர்ந்த கல்யாண வீடு!

கேரளாவில் திருமணத்தின்போது மணவறையில் தாலிகட்டும் தருணத்தில் தனக்கு திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் ஒருவர் மணமேடை விட்டு எழுந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு தன்னுடைய பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி திருமணமும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக இருவீட்டாரின் சொந்த பந்தங்களும் மண்டபத்தில் கூடி இருந்துள்ளனர்.

சரியாக தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மணமகன் கட்ட வந்த தாலியை தடுத்து நிறுத்தி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார் . உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் அந்த பெண்ணிற்கு எதார்த்தத்தை புரியவைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்குமாறு கூறியிருக்கின்றனர். இருப்பினும் அந்த பெண் விடாப்பிடியாக இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

பின்னர் மண மேடையில் இருந்து சென்றிருக்கிறார். அந்தப்பெண்ணின் இத்தகைய செயலால் ஒரு பாவமும் அறியாத அந்த மணமகன் மிகவும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த சம்பவத்தை திருமணத்தில் பங்கேற்க வந்த நபர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் எடுத்து அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

தற்போது இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.