சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக 2 வாரங்களுக்கு IPL போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியில் இருந்து வெளியேறும் முக்கிய ஆல் ரவுண்டர்! குழப்பத்தில் தோனி
இது குறித்து அறிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடைய இரண்டு வார காலம் ஆகும் என்பதால் பிராவோ அடுத்த இரண்டு வாரம் ipl போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று அறிவித்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் எனவும், இந்த இழப்பை ஈடுகட்ட வேறு சில முடிவுகள் எடுக்கப்பட்டு அது சரி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
பிராவோ டெத் ஓவெர்ஸ் வீசுவதில் வல்லவர். அவர் இல்லாத நிலையில் மோஹித் சர்மா மற்றும் ஷரத்துள் தாக்குர் ஆகியோரை டெத் ஓவரை வீச வைக்கலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார். மேலும் இது பற்றி டோனி மற்றும் அணியின் கோச் பிளெமிங் இனைந்து முடிவெடுப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே லுங்கி நிகிடி இந்த ipl தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் டேவிட் வில்லே அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரும் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இப்போது பிராவோ வும் காயம் காரணமாக வெளியேறுவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.