43 வயதில் கர்ப்பமான அழகுக்கலை நிபுணர்..! காரணம் 32 வயது பிரசாந்த்..! பிறகு தனிமையில் இருந்த போது நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

உல்லாசம் அனுபவித்த பின்னர் காதலன், காதலியை கொலை செய்து வீட்டின் பின்பக்கத்தில் புதைத்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கோட்டயம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட திருக்கோவில்வட்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சுசித்ரா. இவருடைய வயது 42. இவர் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். மார்ச் மாதம் 18-ஆம் தேதியன்று, தான் பணியாற்றி வந்த அழகு நிலையத்திலிருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொச்சி சென்றுள்ளார்.

அப்போது அழகு நிலைய உரிமையாளரிடம் தன்னுடைய தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்று கூறிவிட்டு, 5 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லவில்லை. இதையறிந்த அவருடைய பெற்றோர் மார்ச் 22-ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சுசித்ராவின் செல்போனிலிருந்து அடிக்கடி பாலக்காட்டில் உள்ள பிரசாந்த் என்பவருக்கு அழைப்புகள் சென்றிருந்தது கண்டுபிடித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் தனிக்குழு அமைத்து பாலக்காடு விரைந்தனர். 

பிரசாந்திடம் சென்ற பின்னர் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் ஒப்புக்கொள்ளாத பிரசாந்த் பின்னர் தான் தான் சுசித்ராவின் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், சுசித்ரா அவரை காண்பதற்காக பாலக்காடு வந்ததாகவும், அப்போது வீட்டில் யாருமில்லாததால் இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மேஜை விளக்கு மின் வையரை யாருடைய கழுத்தில் சுற்றி நெருக்கி கொலை செய்ததாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் சுசித்ராவின் கால்களை துண்டித்ததாகவும், பிறகு உடலை எரித்து வீட்டின் பின்பக்கத்தில் புதைத்ததாகவும் கூறியுள்ளார். அவர் கூறியபடி காவல்துறையினர் தோண்டி எடுத்ததில் சுசித்ராவின் உடலை கண்டுபிடித்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.