கம்புக் காட்டிற்குள் காதலன் கூறிய வார்த்தை! அவன் கண் முன்னே காதலி செய்த திடுக் காரியம்!

காதலித்துவிட்டு ஏமாற்றப்பட்ட துக்கத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் எனுமிடம் அமைந்துள்ளது. இதனருகேயுள்ள மாமல்லபுரத்தை சேர்ந்தவர் மாரிக்கண்ணு. இவருடைய மகளின் பெயர் நிஷா. அனுஷாவின் வயது 22. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார்.

மாமல்லபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருடைய வயது 23. இவரும் நிஷாவும் பல ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தனர். நெருக்கமானது காதலாக மாறி 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.  இவர்களுடைய காதலை அனைவரும் அறிந்தனர். ஊர் பெரியவர்கள் இவர்களுடைய காதலை பெரிய அளவில் எடுத்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் தனிமையில் நெருங்கி பழகி வந்தனர்.

இந்நிலையில் இளையராஜாவின் தாயார் வெளிநாட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார். வந்தவுடன் இவர்களது காதல்  கதையை கேட்டறிந்தார். ஆனால் இவர்களது காதலுக்கு இளையராஜாவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் இளையராஜா செய்வதறியாது திகைத்தார்.

சனிக்கிழமையன்று நிஷாவை பார்ப்பதற்காக இளையராஜா அழைத்துள்ளார். இருவரும் கலந்தாலோசிக்க தொடங்கினர். அப்போது இளையராஜா தன் தாயார் திருமணத்திற்கு அனுமதிக்க மறுத்ததாக கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்போது இளையராஜா நிஷாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

மனமுடைந்த நிஷா அருகிலிருந்த 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தால் நிஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.