அசுரன் Vs நம்ம வீட்டுப் பிள்ளை! வசூல் வேட்டையில் முந்தியது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஹனி இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்த திரைப்படமானது கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் நடித்திருந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் சாதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 நாட்கள் முடிவடைகிறது. இதுவரை இந்த திரைப்படம் 4.49 கோடி வசூலை பெற்றுள்ளது. இதேபோல் தனுஷ் நடிப்பில் உருவான "அசுரன் " திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் முடிவடைகிறது. இதுவரை இந்த திரைப்படம் 2.24 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.