இட்லிக்கு சுடச்சுட பல்லி சாம்பார்! பொன்னேரியில் சாப்பாடு பிரியர்களை அதிர வைத்த ஓட்டல்!

ஹோட்டலிலிருந்து வாங்கிய குழம்பில் பல்லியிருந்த சம்பவமானது பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரில் பொன்னேரி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நண்பர்கள் தெரு எனுமிடத்தில் சையத் சுல்தான் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் ஒரு செல்போன் கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு பொன்னேரி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு உணவகத்தில் தனக்கும், தன் மனைவிக்கும் இட்லி வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று சாப்பிட தொடங்கியபோது எதிர்பாராவிதமாக சாம்பாரில் பல்லியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக செய்யத் தன்னுடைய மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.