கொத்தடிமை ஒழிப்பு நாள்... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் சூசக அறிவிப்புக்கு அலறும் அ.ம.மு.க.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டால், அத்தனை அ.தி.மு.க. நிர்வாகிகளும் அடிமைகள் போன்று கைகட்டி நிற்பார்கள் என்று தினகரன் தரப்பு மீண்டும் மீண்டும் கூறிவந்தது.


இந்த நிலையில் இன்று கொத்தடிமை நால் குறித்து ஒரு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை( பிப்ரவரி 9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.

"யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்! என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது, சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்குமான அறிவிப்புதான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? இந்த அறிவிப்பு அ.ம.மு.க. வட்டாரத்தை அலற விட்டுள்ளதாகத் தெரிகிறது.