நடிகர் விஜய் வீட்டு முன்பு திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்..! பிகில் ரீலிஸ் ஆகி 4 நாளில் பரபரப்பு! அதிர்ச்சி காரணம்!

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்


இயக்குனர் அட்லி இயக்கத்தில் , ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் இரு முக்கியமான தோற்றத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி தளபதி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிய மூன்று நாட்களில் ரூபாய் .150 கோடி வசூலை பெற்றதாக படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தை ஒட்டி , படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் . ஆனால் இந்நிலையில் நடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . அதாவது கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மூலம் அழைப்பு வந்துள்ளது. அந்த போனில் பேசிய அந்த மர்மநபர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அந்த வெடிகுண்டு இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறியிருக்கிறார் . இதனை அறிந்த போலீஸ் அதிகாரிகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டினை சோதனையிட்டுள்ளனர் . அதேபோல் ஈசிஆரில் உள்ள விஜயின் மற்றொரு வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். 

இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ .சேகரின் வீட்டிற்கும் , ஈசிஆரில் உள்ள விஜயின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . மேலும் இந்த வழக்கானது சைபர் கிரைம் போலீசாரால் மிகவும் தீவிரமாக விசாரித்து வரப்படுகிறது. தொலைபேசியில் பேசி இளைஞர் ஆலப்பாக்கத்தில் இருந்து பேசியதாக போலீசார் கண்டறிந்துள்ளனர் . மேலும் இதற்கு பின்பு இருக்கின்ற உண்மை காரணத்தையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.