பிரபல நடிகரின் மகள் பிறந்த நாள்! இளம் நடிகருடன் ஒரே காரில் ஜோடியாக வந்த ஸ்ரீதேவி மகள்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் மற்றும் மீரா அவர்களின் மகனுடைய பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர்.


நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மீரா தம்பதியினரின் மகன் சைன் கபூரின் பிறந்தநாளை அவர்களது இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடினர் . பிறந்தநாள் விழாவிற்கு ஜான்வி கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஜான்வி கபூர் மற்றும் இஷாந்த் கட்டார் இருவரும் இணைந்து இந்த விழாவில் கலந்து கொண்டனர் .

மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக "தடக் " என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இதுவே ஜான்வி கபூர் நடித்த முதல் திரைப்படமாகும். தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு மீரா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருந்தார். அவருடைய குழந்தையை கையில் வைத்து உள்ளவாறு இருந்தது அந்த புகைப்படம். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக, " என்னுடைய உலகமே நீதான் " என்று பதிவிட்டிருந்தார். 

நடிகர் ஷாகித் கபூரும் மீராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மிசா என்ற ஒரு பெண் குழந்தையும் தற்போது ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தன் மகனின் முதலாவது பிறந்த நாளை தான் இவர்கள் பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நடந்தாலும் ஸ்ரீதேவி மகள் இளம் நடிகர் ஒருவடன் அந்த விழாவில் பங்கேற்றது தான் ஹாட் டாபிக் ஆகிவிட்டது.