வீட்டிற்குள் கணவன் செய்யும் மோசமான செயல்! வீடியோ எடுத்து போலீசிடம் கொடுத்த நடிகை!

கொடுமை செய்வதாகக் கூறி, நடிகை ஆர்ஸூ கோவித்ரிகர் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.


பாலிவுட் நடிகை ஆர்ஸூ கோவித்ரிகர், சித்தார்த் சப்பர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டு, குடித்தனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சித்தார்த் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி, மும்பை வேர்லி போலீஸ் நிலையத்தில் ஆர்ஸூ புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இதுதவிர, குடித்துவிட்டு, போதையேறிய நிலையில், சித்தார்த் தன்னை அடிப்பது மற்றும் சித்ரவதை செய்வது தொடர்பான சிசிடிவி கேமிரா காட்சி பதிவுகளையும் ஆர்ஸூ போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து, அவரது கணவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விரைவில் நடிகையை அடித்து துன்புறுத்தும் கணவனை போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு முறை கணவன் மீது புகார் கூறிய நடிகை பின்னர் சமாதானம் ஆகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.