நடிகர் கணவனின் நடிகை கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றும் நடிகரின் மனைவி! புகைப்படம் வெளியானது!

பாலிவுட் நடிகர் ஃபர்கான் அக்தரின் காதலியும், அவரது முன்னாள் மனைவியும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


ஃபர்கான் அக்தரின் முன்னாள மனைவி அதுனா பபானி. கடந்த 2000ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை ஒன்றாக குடும்பம் நடத்திய இவர்களுக்கு, ஷாக்யா, அகிரா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 

இதையடுத்து, அதுனா, ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வலம் வருகிறார். ஒரு சில படங்களிலும் அவர் நடித்தார். அவர் நடத்தி வரும் பிபிளன்ட் சலுன் கடையின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ரெஸ்டாரன்ட் தொழிலதிபர் நிக்கோலோ என்பவருடன் அதுனா, டேட்டிங் செய்து வருகிறார்.

இந்த நிக்கோலோ நடிகர் டினோ மொரியோவின் சகோதரர் ஆவார். இதேபோல, ஃபர்கான் அக்தரும் ஷிபானியை டேட்டிங் செய்து வருகிறார். இந்த ஷிபானியும், அதுனாவும் மும்பையில் நடைபெற்ற ரூட்ஸ் பிரிமீயர் லீக் நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றனர்.

அதன்போது, இருவரும் பேசி சிரிப்பது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது நடிகர் பர்ஹான் அக்தரின் தற்போதைய காதலியும் முன்னாள் மனைவியும் மிக இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். 

அதுமட்டும் இல்லாமல் இருவரும் ஒன்றாக எங்கு சென்றாலும் சென்று வருவதாக கூறப்படுகிறது. தனது கணவரின் காதலி என்று தெரிந்து அவருடன் அதுனா நெருங்கி பழகுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.