வாய்ப்பு வேணும்னா படுக்கைக்கு வரணும்..! பிரபல ஹீரோவை அழைத்த தயாரிப்பாளர்..! திரையுலகில் ஓரினச்சேர்க்கை..!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் ஆயுஷ்மான் குரானாவை அழைத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாகவே மீடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரை உலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாக மீடு மூலம் தெரிவித்தனர். இதன் மூலம் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது.‌ பொதுவாகவே இந்த புகாரை பொறுத்தவரையில் ஆண் நடிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ தங்கள் உடன் பணியாற்றும் சக நடிகைகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர் என்பதைதான் புகாராக முன்வைத்தனர். ஆனால் தற்போது முதன்முறையாக ஆண் நடிகர் ஒருவர் மீடு மூலம் புகார் தெரிவித்திருக்கிறார். 

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபல கதாநாயகனாக மாறியுள்ளார். இவருக்கு என்று பாலிவுட் திரையுலகில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தற்போது என்னுடைய வாழ்வில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறிய அந்த தகவல்கள் பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நடிகர் ஆயுஷ்மான் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அப்போது தனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்று அவரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பிரபல தயாரிப்பாளர் "நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்.. உனக்கான வாய்ப்பு நிச்சயம் தேடி வரும் "‌என்று கூறியிருக்கிறார். மேலும் அவரிடம் தவறாக நடந்து கொள்ளவும் அந்த தயாரிப்பாளர் முயற்சித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் ஆயுஷ்மான் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறி இருக்கிறார். மீடு மூலம் புகார் அளித்த முதல் ஆண் நடிகர் ஆயுஷ்மான் குரானா தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ஆயுஷ்மான் வெளியிட்டுள்ள இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.