திருமணமாகி 11 வருடம்..! இன்னும் நாங்கள் அந்த இடத்தை கை வைப்பதை விடவில்லை..! நடிகரை கூச்சப்பட வைத்த பிரபல நடிகை!

ஆயுஷ்மான் குர்ரானாவும், தாஹிரா காஷ்யப்பும் நேற்றைய தினம் தங்களுடைய 11 ஆம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினர். தங்களுடைய திருமண நாளுக்காக வாழ்த்துச் செய்திகளை இருவரும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளத்தில் பரிமாறிக் கொண்டனர்.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆயுஷ்மான் குர்ரானா தன்னுடைய மனைவி தாஹிரா உடன் இணைந்து பதினோராம் ஆண்டு திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார். நடிகர் ஆய்ஷ்மான் இன் மனைவி இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விராஜ் வீர் என்ற ஒரு மகனும் வருஷ்கா என்ற ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் தங்களுடைய திருமண நாள் முன்னிட்டு தாஹிரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரைப் பற்றிய அழகான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், காதலிப்பதை விட, உங்கள் சொந்த சிறிய விசித்திரக் கதையை விடவும் வேறு எதுவும் அழகாக இல்லை. தடைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், உண்மையான அன்பை உடைக்க கூடியது எதுவும் இல்லை. மேலும் தாஹிரா அவர்களது திருமண விழா மற்றும் சங்கீத் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தன் கணவருடன் பகிர்ந்து கொண்டார். மேலும் 11 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ எதையெல்லாம் செய்தோமோ அதை இன்றும் செய்து வருகிறோம் . மேலும், என் இதயம் 10 மடங்கு வேகமாக துடித்தது, , துள்ளியது,  என்றும் வெட்கத்துடன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் தன்னுடைய மனைவியின் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் ஆயுஷ்மான், அவர் மனைவி வெளியிட்ட திருமணம் மற்றும் சங்கீத் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படத்திற்கு கேப்சனாக "இந்த அழகான பெண்ணுடன் 11 ஆண்டுகள்" என்று வெளியிட்டிருந்தார். மேலும் இந்த பதிவை சமூக வலைத்தளத்தில் இடும் பொழுது தன்னுடைய அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் . மேலும் தன்னுடைய மனைவிக்கு அழகிய பதினோராம் ஆண்டு திருமண வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் ஆயுஷ்மான். இந்த பதிவை பார்த்த இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.