நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன் தன்னைப் பெற்ற தாய் தயாளு அம்மாளிடமும் தனது தந்தை கலைஞரின் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாள் இடமும் ஆசீர்வாதம் பெற்று ஸ்டாலின் நெகிழச் செய்து உள்ளார்.
பெற்ற தாயையும் பெறாத தாயையும் நெகிழச் செய்த மு.க ஸ்டாலின்! உறவினர்கள் ஆனந்த கண்ணீர்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டார். தொடர்ந்து தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மு க ஸ்டாலின் தனது சொந்த ஊரான திருவாரூரிலிருந்து நாளை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன்னர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தை கலைஞர் வாழ்ந்த வீட்டிற்கு மு க ஸ்டாலின் சென்றார்.
அங்கு தனது தாயார் தயாளு அம்மாளிடம் தேர்தல் அறிக்கையை கொடுத்து ஆசிர்வாதம் பெற்று விட்டு நாளை பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக கூறி ஆசீர்வாதம் வாங்கினார் மு க ஸ்டாலின்.
தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் மு க ஸ்டாலினின் கார் நேராக சிஐடி காலனி சென்றது. சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்குச் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த கனிமொழியின் தாயும் தனது தந்தையின் மனைவியுமான ராஜாத்தி அம்மாள் இடமும் ஆசீர்வாதம் பெற்றார்.
பிரச்சாரத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் மு க ஸ்டாலின் தன்னைப் பெற்ற தாயான தயாளு அம்மாளிடமும் தன்னை பெறாத தாயான ராஜாத்தி அம்மாள் இடமும் ஆசிர்வாதம் வாங்கி விட்டு சென்றது அவரது குடும்ப உறுப்பினர்களை நெகிழச் செய்வதாக இருந்தது.