கள்ளக் காதலி மட்டும் போதாது! அவள் மகளும் வேண்டும்! வீட்டுக்கு சென்று வெறியாட்டம் போட்ட நபருக்கு நேர்ந்த பயங்கரம்!

முதியவர் ஒருவர் தன்னுடைய பெண்ணின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள குருசாமிபாளையம் எனுமிடத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 38. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். விஜயாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். 

மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இளைய மகளின் பெயர் வசந்தி. இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு, மருந்தகத்தில் பகுதி நேர வேலை செய்து வந்தார்.  அதனால் வசந்தி விஜயாவின் மாமியாரான தனத்தின் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே மகள்களை கரையேற்றுவதற்காக விஜயா குருசாமிபாளையத்தில் வேலைக்கு சென்று வந்தார். 

அப்போது அவருக்கு 40 வயது நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சாமுவேலுக்கு வசந்தியின் மீதும் ஆசை வந்தது. 


திடீரென்று நேற்றிரவு சாமுவேல் தனத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். தனத்திடம் வசந்தியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சாமுவேல் முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு தனம் ஒரு துளி கூட சம்மதிக்கவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் வசந்தியை அனுப்பி வைக்க முடியாது என்று தனம் உறுதியாக இருந்துள்ளார். 4 மணி நேரமாக வசந்தியை அழைத்து செல்வதற்காக சாமுவேல் போராடியுள்ளார். 

பொறுமையை இழந்த சாமுவெல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனத்தின் உடலில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். தனத்தின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது சாமுவேல் கூரையின் மேல் அமர்ந்துகொண்டு ஆசிட்டை வீசி விடுவதாக பொதுமக்களை மிரட்டியுள்ளார்.


2 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் கூரையை பிரித்தெடுத்து சாமுவேலை கீழே இறக்கினர். அப்போது அவர் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை பொதுமக்களின் மீது வீசியுள்ளார். பின்னர் பொதுமக்கள் கல்லால் அடித்து சாமுவேலை கொலை செய்தனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.