கணவனுக்கு துரோகம் செய்த மனைவிக்கு கள்ளக் காதலன் மூலம் கிடைத்த தண்டனை! சென்னை லாட்ஜில் பரபரப்பு!

காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் முருகன்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்துபழகி வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இதில் மோகனாவுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது. வீராசாமி உடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு பெரியமேடு பகுதிக்கு வந்துள்ளனர். இங்குள்ள விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கினர். வீராசாமிக்கு மதுப்பழக்கம் உள்ளது. அறையிலிருந்த போது அவர் கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்தார். வீராசாமி மோகனா பார்த்து மதுபோதையில், "நீ உன் கணவனை ஏமாற்றி என்னிடம் வந்தது போன்று என்னை ஏமாற்றி வேறு ஒருவனுடன் ஏன் சொல்ல மாட்டாய்" என்று கேட்டுள்ளார்.

இருவருக்கும் ஒரு கட்டத்தில் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வீராசாமி தன் வேட்டியினால் மோகனாவின் முகத்தை மூடி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வேட்டியினால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல சித்தரிக்க முயற்சித்தார்.

சம்பவத்தை அறிந்த விடுதி நிர்வாகிகள் திருவொற்றியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து வீராசாமியை கைது செய்தனர். தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.