அவர் போய்ட்டார்! கணவன் குறித்து கள்ளக்காதலனுக்கு மனைவி கொடுத்த சிக்னல்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

இளம்பெண் தன்னுடைய கள்ளக்காதலர் மூலம் கணவரை கொலை செய்துள்ள சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மேல்வயலாமூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய வயது 32. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சாந்தி என்ற 30 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

3 நாட்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் கார்த்திகேயன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கவனித்த அப்பகுதி மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கார்த்திகேயனின் மனைவியான சாந்தியிடம் காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அன்றிரவு  இயற்கை உபாதை கழிப்பதற்காக மரத்திற்கு அருகே கார்த்திகேயன் சென்றதாக சாந்தி கூறியுள்ளார். பிரேத பரிசோதனை முடிவில் கார்த்திகேயன் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததை காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.

பின்னர், விசாரணையை தொடர்ந்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அப்போது சாந்திக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி என்பவருடன் தகாத உறவு இருந்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. கரும்பு வெட்டுவதற்காக இவர்களுடைய கிராமத்திற்கு வந்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகேயனுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவருடன் நெருக்கமாக தங்கமணி பழகி வந்துள்ளார். விரைவில் தங்களுடைய கள்ளக்காதல் கணவருக்கு தெரிய வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவரை கொலை செய்வதற்கு சாந்தி தங்கமணிக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதையை கழிக்க சென்ற கார்த்திகேயனுக்கு தங்கமணி மது ஊற்றி கொடுத்துள்ளார். மது போதை அதிகமான பிறகு கார்த்திகேயனை கடுமையாக தாக்கி தங்கமணி கொலை செய்துள்ளார். பின்னர் அது தற்கொலை போன்று இருக்கவேண்டும் என்பதற்காக அவரை மரத்தில் கட்டி வைத்து, தூக்கிலிட்டதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.