வெளியூரிலிருந்து வந்த கணவரின் தனிமைப்படுத்தும் காலத்திற்குள், மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியூரில் இருந்து திரும்பிய கணவன் கொரோனா மையத்தில்..! தனிமையில் தவித்த மனைவி எடுத்த தகாத முடிவு! இப்படியும் நடக்குமா?

பீகார் மாநிலத்தில் விஜய் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் வயிற்று பிழைப்புக்காக குஜராத்தில் உள்ள தன்னுடைய உறவினரின் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக விஜய் சென்றுவிட்டார்.
இந்நிலையில் விமலா பீகாரிலேயே தங்கி வந்துள்ளார். அப்போது அவருடன் குந்தன் என்ற இளைஞர் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இந்த நெருக்கமானது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் மறைமுகமாக திருமணம் செய்துகொள்வதற்கு முடிவெடுத்தனர்.
இவர்களுடைய திட்டம் நிறைவேறுவதற்குள் விஜய் குஜராத்திலிருந்து பீகார் வந்தார். வெளிமாநிலத்தில் இருந்து வந்ததற்காக 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தருணத்தில் எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் விஜய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர் வீட்டிற்கு வந்த மறுநாளிலேயே விமலா மற்றும் குந்தன் அங்கிருந்து ஓடிவிட்டனர். பதறிப்போன விஜய் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கள்ளக்காதல் ஜோடியை கண்டறிந்தனர். உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பெரியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விமலா தான் குந்தனுடன் தான் செல்வேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன் பின்னர் பஞ்சாயத்தார் மற்றும் காவல்துறையினர் கூறிய அறிவுரைகளை கேட்டு மனம் மாறி விமலா தன்னுடைய கணவரான விஜயுடன் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.