அடுத்தவன் பொண்டாட்டி கூடவா பைக்ல போற..!? மதுரை மேலூரில் அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!

கள்ளக்காதலர்களை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருவது மேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட தெற்கு தெருவில் ஆயம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ஆயம்மாள் அப்பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரான தமிழ்மாறனின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே ஆயம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் நேரத்தை கழிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இருவரும் நேற்று திருவாதவூர் சென்றுள்ளனர். அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஆண்டிப்பட்டி நிமாய் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே 2 இருசக்கர வாகனங்களில் அந்த மர்ம நபர்கள் வழிமறித்து இவர்களை கழுத்து கை கால் தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.