கள்ளக்காதலனுடன் இணைந்திருந்த டிக்டாக் வீடியோக்கள் வெளியானதால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவமானது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக்கில் கள்ளக்காதல் வீடியோ! மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் - கரூர் பதட்டம்
 
                                        
                                                                    
                				
                            	                            
கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு சிவசங்கரன், சூரியகுமாரி என்னும் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜூலை மாதம் 15-ஆம் தேதியன்று தன் மனைவியை காணவில்லை என்று கூறி சிவசங்கரன் தாந்தோனிமலை காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். தன் மனைவியை யாருடனோ அதிகமாக செல்போனில் பேசி கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜூலை மாதம் 14-ஆம் தேதியன்று பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில் அடைக்கப்பட்டிருந்தார். காவல்துறையினர் சிவசங்கரனை அடையாளம் காண்பதற்கு அழைத்த போது, இறந்து கிடந்தது தன் மனைவி சூரியகுமாரி தான் என்று சிவசங்கரன் அடையாளம் காட்டியுள்ளார். 
காவல்துறையினர் சூரியகுமாரியின் செல்போன் கால்களை கண்காணித்த போது, அவர் முசிறியை சேர்ந்த சக்திவேலிடம் சூரியகுமாரி அதிகமாக பேசி கொண்டிருந்தது தெரியவந்தது. 
அந்த இளைஞனை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். ஆனால் அந்த இளைஞனின் செல்போன் சிக்னல் கரூரில் வரவேயில்லை என்பதனை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் சிவசங்கரியின் செல்போன் வீட்டிற்குள்ளேயே சுவிட்ச் ஃஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் காவல்துறையினர் சிவசங்கரன் மீது கவனத்தை திருப்பினர்.
காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது சிவசங்கரன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது "என் மனைவி தன் சகோதரியின் வீட்டிற்கு சொல்வதாக கூறி முசிறியை சேர்ந்த சக்திவேலுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். திருமணமாகி 19 வருடங்களுக்கு பிறகு அவர் கள்ளகாதல் வீடியோ ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்தேன். கடந்த மாதம் 7-ஆம் தேதியன்று இந்த சம்பவத்தால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. என் மனைவியும், சக்திவேலும் ஒன்றாக இருந்த டிக்டாக் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த நான் அவரை அடித்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் போட்டு திண்டுக்கல் கொடைரோட்டில் போட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர் சிவசங்கரனை கைது செய்தனர். இந்த சம்பவமானது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
