அண்ணன் மனைவியை அழைத்துச் சென்று தாலி கட்டிய தம்பி! துரத்திய உறவுகள்! பின்னர் நேர்ந்த விபரீதம்!

கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் விலாரிப்பட்டு என்னும் கிராமமுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவரின் சித்தப்பா மகனின் பெயர் ஐயப்பன்.

திருமணமான பிறகு அகிலாவின் வீட்டிற்கு ஐயப்பன் அடிக்கடி வந்து போயுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. ஊரில் இருவராலும் ஒன்றாக வாழ முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் யாருக்கும் தெரியாமல் மே மாதம் ஊரை விட்டு வெளியேறினர். 

அகிலாவின் உறவினர்கள் அவரை காணவில்லை என்று அனைக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் பல வழிகளில் முற்படும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஊருக்குள் வந்தனர். வந்த சில நாட்களிலேயே அவர்கள் நிறைய துன்பத்தை சந்தித்தனர்.

இதனால் மனம் நொந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள எண்ணினர். அதற்கேற்றவாறு அகிலா குளிர்பானத்திலும், ஐயப்பன் மதுவிலும் எலி மருந்தை கலந்து குடித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 

பொதுமக்கள் சடலங்கள் இருப்பதை கண்டு அனைக்காவூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறப்பதற்கு முன்னர் அகிலா புது தாலி கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.