கொரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயின் 2-வது இடத்தை பெற்றுள்ளது.
கொரோனா உயிரிழப்பு..! சீனாவை முந்திய இன்னொரு நாடு! திரும்பிய திசை எல்லாம் மரண ஓலம்! எங்கு தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 19,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 4,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தாலியில் அதிகபட்சமாக 6820 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் 3,400 பேர் உயிரிழந்தனர். 3-வதாக சீனாவில் 3280 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 738 பேர் உயிரிழந்துள்ளனர் இன்று செய்தியானது நாட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின் இத்தாலி, ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் அதிகளவில் மக்கள் இறந்துள்ளனர். சடலங்களை உடன் இருப்பவர்களால் வெளியே கொண்டுவர இயலாததால், இராணுவத்தினர் அங்கு சென்று நூற்றுக்கணக்கான சடலங்களை அப்புறப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் நேற்றைய நாளை அந்நாட்டு அரசாங்கம் ஸ்பெயின் நாட்டு வரலாற்றின் கருப்பு தினமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியானது அந்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.