தீவிரவாதி பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொலை செய்யப்பட்டாரா..? அமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சி தகவல்

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டிலுள்ள இரட்டை கோபுரத்தை உலகின் மிக பயங்கரவாதியாக கருதப்பட்ட பின்லாடன் பயங்கரவாதிகளின் துணையோடு தகர்த்தார். அமெரிக்கா நாடு பலமுறை முயற்சித்து 2011-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவின் ராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டு ஒசாமா பின்லேடன் கொலை செய்தனர். இரட்டை கோபுரத்தின் தாக்குதலின் போது பின்லாடனின் மகன் ஹம்சா சின்னஞ்சிறு குழந்தையாக அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்லாடன் உயிரிழந்த பிறகு  மேற்கு நாடுகளை ஹம்சா பின்லாடன் அச்சுறுத்தி வந்துள்ளார். அமெரிக்க உளவுத்துறையினர் பிப்ரவரி மாதம் முதல், "ஹம்சா பின்லேடன் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும்" என்று தகவல் வெளியிட்டனர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சியினால் ஹம்சா பின்லாடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.