பிகில் மேட்னி ஷோ! மொத்தமே 4 டிக்கெட் தான் விற்பனை! அதிர்ச்சியில் சென்னை தியேட்டர் ஓனர் எடுத்த முடிவு!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை பார்க்க 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்ததால் திரையரங்க உரிமையாளர் மேட்னி ஷோவை ரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படமானது தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கிலும் பிகில் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தேவி திரையரங்கில் உள்ள தேவி பாரடைஸ் அரங்கில் 3:15 மணிக்கு திரையிட படுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு வெறும் நான்கு பேர் மட்டுமே முன்பதிவு செய்ததால் திரையரங்க உரிமையாளர் 3:15 மணிக்கு திரை விடுவதாக அறிவித்திருந்த பிகில் திரைப்படத்தை ரத்து செய்தார். அதுமட்டுமில்லாமல் முன்பதிவு செய்திருந்த நான்கு பேரும் அதே வளாகத்திலுள்ள தேவி அரங்கில் படம் பார்க்க அனுப்பி வைக்கப்பட்டனர். 

பொதுவாக திரையரங்கில் ஒரு திரைப்படம் திரையிடப்படும் போது குறைந்தது 20 பேராவது திரையரங்கில் இருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மட்டுமே திரை படத்தை திரையிடுவது வழக்கம். ஆனால் முன்னணி நட்சத்திரமான விஜயின் திரைப்படம் வெளியாகி 7நாட்களில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது திரையரங்கம் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.