என்னை சேரன் என்னவெல்லாம் செய்தார் என்பது சேரனுக்கே தெரியும்! உருகும் பிக்பாஸ் மீரா!

பிக் பாஸ் சீசன் 3 இல் கடந்த வாரம் நடிகை மீரா வெளியேற்றப்பட்டார் . இவர் இயக்குனர் சேரனின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்ததால் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு நடிகை மீரா மிதுன் அளித்த பேட்டி ஒன்றில் , பிக் பாஸ் சீசன் 3 தொடக்கம் முதலே இயக்குனர் சேரன் தன் மீது தனிப்பட்ட வெறுப்பு மற்றும் மனக்கசப்புடன் இருந்து வந்தார் எனவும் , மேலும் சாக்ஷி சிறையில் அடைக்கப்பட்ட போது இயக்குனர் சேரன் சாக்ஷி இடம் என்னைப் பற்றி தவறாக பேசி சாட்சியை  எனக்கு எதிராக செயல்பட வைத்தார்  எனவும் நடிகை மீரா இயக்குனர் சேரன் மீது குற்றம் சாட்டியுள்ளார் .

மேலும் இயக்குனர் சேரனின் கருத்திற்கு பல சமயங்களில் நான் எதிராக நின்றது அவருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை எனவும் நடிகை மீரா கூறியுள்ளார்.

மேலும் சேரன் நினைத்தது போலவே அவருக்கு முன்னால் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் .

இதுபோன்ற பல விஷயங்களில் இயக்குனர் சேரன்  தனக்கு எதிராக செயல்பட்டு இருப்பதாகவும் , அது என்னவென்று அவருக்கே தெரியும் எனவும் நடிகை மீரா கூறியுள்ளார் .