பிக் பாஸ் சீசன் 3 இன் போட்டியாளர் நடிகை மீரா மிதுன் அவரது கணவருடன் இருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
அவன் எனக்கு ஒரு நாள் கணவன்! கல்யாணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த பிக்பாஸ் மீரா!
பிக் பாஸ் சீசன் 3 இல் கடந்த வாரம் நடிகை மீரா வெளியேற்றப்பட்டார் . இவர் இயக்குனர் சேரனின் மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்ததால் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீரா மற்றும் அவரது கணவருடன் உள்ளது போல ஒரு புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
தன்னுடைய கணவர் மற்றும் அந்த புகைப்படம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை மீரா மிதுன் ,அது எனது அப்பா அம்மா பார்த்து நடத்திய மேரேஜ் . அது ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மேலும் அந்த திருமணம் பதிவு கூட செய்யப்படவில்லை எனவும் நடிகை மீரா கூறியுள்ளார் .
மேலும் பிக் பாஸ் சீசன் திரையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ,தர்ஷன் அவருக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் எனவும் நடிகை மீரா கருத்து கூறியுள்ளார் .