ரயில் கக்கூஸ்ல கெட்ட வார்த்தை எழுதுற கேஸ் அது! கஸ்தூரியை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 3ல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நடிகை கஸ்தூரியை , கடந்த பிக் பாஸ் 2 சீசனில் போட்டியாளராக பங்கேற்ற டேனி கடுமையாக விமர்சித்துள்ளார் .


கடந்த இரண்டு சீசன்களில் போலில்லாமல் இந்த சீசன் தொடக்கம் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது .பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கஸ்தூரி தொடக்கத்தில் சக போட்டியாளர்களை சரமாரியாக கேள்வி கேட்டு வந்தாலும் , பிக்பாஸில் வனிதாவின் ரீ என்ட்ரி பிறகு பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார் என்றே கூறலாம்  . 

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எல்லாம் , நிகழ்ச்சியில்  பங்குபெறும்  போட்டியாளர்கள் இப்படி செய்திருக்கலாம்  , அப்படி செய்திருக்கலாம் என கூறிக் கொண்டிருப்பார்கள் .ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பார்த்தால் தான் தெரியும் . 

இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நடிகை கஸ்தூரி என்று  பிக் பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர் டேனி கூறியுள்ளார் . மேலும் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாத போது ட்விட்டரில் பயங்கரமா ட்வீட் போட்டு ட்ரெண்டாக்கி வந்தார் .

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவுடன் நடிகை கஸ்தூரி தன்னுடைய நடவடிக்கைகளை  முற்றிலுமாக மாற்றிக்கொண்டு பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார் . நடிகை கஸ்தூரி போன்ற ஆட்கள் தன்னை பிடிக்காதவர்களை கக்கூசின்  சுவற்றில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு எழுதிவிட்டு செல்வார்களே அவர்களைப் போலத்தான். 

ஆனால் நேரடியாக அவரால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்துள்ளார் பிக் பாஸ் 2  சீசன் போட்டியாளர் டேனி .