பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மலேசியாவை சேர்ந்த முகேன் தன்னுடைய காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவள் தான் என் காதலி..! கடைசியாக புகைப்படம் மூலம் உறுதிப்படுத்திய பிக்பாஸ் முகேன்..! யார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகெங்கிலுமிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் மலேசியாவை சேர்ந்த முகேன் என்பவர் போட்டியாளராக பங்கேற்றார்.
முகேன் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
தமிழ்நாட்டைப் போலவே மலேசியாவிலும் இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்த போது இதே நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த அபிராமி வெங்கடாச்சலம் முகேனின் மீது காதலில் விழுந்தார். ஆனால் முகினோ அபிராமியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அவருக்கு மலேசியாவில் வேறு ஒரு காதல் இருப்பதாகவும் அந்த காதலை உறுதிப்படுத்துவதற்காக தான் காத்திருப்பதாகவும் கூறிவந்தார்.
இதற்கிடையில் மலேசியாவில் உள்ள முகேன் என் காதலியான நதியா புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது . மேலும் நதியா, முகேனின் காதலியை ஏற்றுக்கொள்வாரா? என்று பலரும் குழம்பி வந்தனர்.
இந்நிலையில் நதியாவின் பிறந்த நாளில் கலந்து கொண்ட போது இருவரும் நெருக்கமாக இருக்கும் விதமான புகைப்படத்தை முகேன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் முகேனும் அவரது காதலி நதியாவும் மஞ்சள் நிற உடையில் உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் முகேனின் காதலை அவரது காதலி நதியா ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று கூறிவருகின்றனர்.
மேலும் இந்த ஜோடிக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.