பிரிந்து வாழ்ந்து வரும் தாய் - தந்தை! முகேனின் சோகம் - கோபத்திற்கு பின் இருக்கும் ரகசியம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பதினாறு போட்டியாளர்களில் முகேன் ராவ் ஒருவராவார்.


முகேன் தன்னுடைய சிறுவயதில் இருந்தே பாடல்களை பாடுவது மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார் . ஆர்வத்துக்கு காரணம் முகேன் தந்தை பிரகாஷ் ராவ் ஆகும் . ஏனெனில் பிரகாஷ் ஒரு சிறந்த பாடகர் ஆவார் .

சிறுவயதிலிருந்தே தந்தையை பார்த்து வளர்ந்த முகேன் தானும் பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய 13-வது வயதில் இருந்தே கவிதைகளையும் எழுத ஆரம்பித்துவிட்டார் முகேன்.

ஆனால் முகேனின் தந்தைக்கு ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியாக தன் மகன் வரவேண்டும் என்பது தான் ஆசை. தன் அப்பாவின் ஆசையை மீறி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார் .

இவை அனைத்தையும் முகேன் தன்னுடைய சொந்த முயற்சியால் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே முகேன் அனைவரிடமும் அன்பாகவும் உண்மையுடனும் பழகக்கூடியவர் என்று அவர்களுடைய நண்பர்கள் கூறுகின்றனர்.

முகேன் சிறுவயதிலிருந்தே பல கஷ்டங்களை சந்தித்தது தான் அவனுடைய கோபத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர். இது மட்டுமில்லாமல் இவரது பெற்றோர் இருவரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.