எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. என்னால முடியல.. அதான்! பிக்பாஸ் வீட்டிலிருந்த வெளியே வந்த பிறகு லாஸ்லியாவின் முதல் பதிவு!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது.


இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா ஒருவராவார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவும் கவினும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துகொண்ட விதம் பழகிய பழக்க வழக்கங்கள் அனைத்தும் மக்களிடத்தில் பெரும் வெறுப்பை உண்டாக்கியது. மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வரவழைக்கப்பட்ட லாஸ்லியாவின் பெற்றோரும் இதனையே தான் அவரிடம் கூறினர். தன்னுடைய தந்தையின் பேச்சை கேட்டு விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் லாஸ்லியா.

அதற்குப் பின்பு தன்னால் இயன்ற வரை போராடி விளையாட ஆரம்பித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் மீண்டும் குடியேறினார். பிக்பாஸ் இறுதி விழாவின்போது அவருக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த லாஸ்லியா இதுவரை எந்த ஒரு பதிவும் சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருந்தார். ஆனால் தற்போது லாஸ்லியா ஒரு புதிய பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில் லாஸ்லியா முதலில்," நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என் மீது செலுத்திய அளவில்லாத அன்பிற்கு முன்னால் நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. இத்தனை நாள் நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லாததற்கு மன்னிப்பு கோருகிறேன் " என்றும் லாஸ்லியா கூறியிருந்தார். மேலும் உங்களை சந்தோஷமும் பெருமையும் படுத்துவேன். லவ் யூ சோ மச் என்று லாஸ்லியா அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.