என்ன நடக்குது அங்க? மாமியாரையும் விட்டு வைக்காத சாண்டி..! வைரல் வீடியோ உள்ளே!

பிக்பாஸ் புகழ் சாண்டி பிரபல தமிழ் திரைப்படத்தின் வசனங்களை மாமியாருடன் டிக்டாக் செய்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.


பிக் பாஸ் 3-வது சீசனில் 2-வது இடத்தை தட்டி சென்றவர் சாண்டி. தன்னுடைய எதார்த்தமான நடவடிக்கைகளாலும், சிரிக்கவைக்கும் நோக்கத்தாலும் மக்களின் மனதில் எளிதில் இடம் பெற்றவர். இவர் ஒரு நடன இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் எதார்த்தமாக செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர், இளையதளபதி விஜய் நடித்த "கில்லி" படத்தின் பிரபல வசனங்களை இவர் தன்னுடைய மாமியாருடன் டிக்டாக்கில் பேசியுள்ளார். 

மேலும் இந்த வீடியோக்களை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை ரசிகர்கள் பெரிதும் ரசித்து பார்த்து வருகின்றனர்.