பிக்பாஸ் முகென் காதலி இந்த பெண் தானா? வைரலாகும் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆனது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் இடையில் நட்பு, சண்டை , காதல் என பல ஏற்படுகின்றன . முக்கியமாக போட்டியாளர்களுக்கு இடையில் ஏற்படும் காதல் குறிப்பிடத்தக்கது .

இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன். இந்த சீசனில் கவின் மற்றும் சாக்ஷி இருவருக்கும் இடையேயான காதல் பெரிதும் பேசப்பட்டு வந்தது. தற்போது அபிராமி மற்றும் முகென்  ஆகிய இருவரின் காதல் பெரிதாகப் பேசப்படுகிறது.

சமீபத்தில் அபிராமி முகெனை காதலிப்பதாக கூறி வருகிறார். பின் அவரிடம்  ஐ லவ் யூ எனவும் கூறினார்.

ஆனால் முகென், அபிராமி தனக்கு ஒரு நல்ல தோழி என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் சாண்டி முகெனிடம் பேசிக்கொண்டிருந்தபோது,   முகென் தனக்கு  காதலி  இருப்பதாகவும் அவரது பெயர் நதியா எனவும் கூறினார் . 

இதனையடுத்து முகென் மற்றும் அவரது காதலி நதியா இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. 

முகென் அபிராமிக்கா அல்லது நதியாவிற்கா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.