கண்ணீர் விடடு கதறிய மோகன் வைத்தியா! சாண்டி மாஸ்டர் மூலம் கமல் அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

யாரும் எதிர்பாராத வகையில் மோகன் வைத்தியாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதாக கூறிவிட்டு பின்னர் கமல் நடத்திய நாடகம் செம ட்விஸ்ட்.


வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேசன் இருக்கும். இந்த வாரம் சனிக்கிழமையே இருக்கும் என்பது போல் கமல் பில்டப் கொடுத்தார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாண்டி மாஸ்டர் தான் எலிமினேசனை கூறப்போகிறார் என்றும் கமல் தெரிவித்தார்.

இதனை அடுத்து பிக்பாஸ் ரூமில் இருந்த எலிமினேசன் கார்டை சாண்டி எடுத்து வர அதில் மோகன் வைத்தியா பெயர் இருந்தது. இதனை பார்த்து சாண்டி கலங்கிவிட்டார். பிறகு மோகன் வைத்தியாவும் கதற ஆரம்பித்தார். ஹவுஸ்மேட்ஸ் எல்லாலும் மோகன் வைத்தியாவை கட்டிப்பிடித்து அழுதனர்.

மோகன் வைத்தியாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சாண்டி ஒரு மூளையில் சென்று அமர்ந்து கொண்டார். சரவணன் மட்டும் தான் சலனம் இல்லாமல் இருந்தார். வனிதா, மது, மீரா போன்றோர் எவிக்சனில் இருந்து தப்பியதாக மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் சாண்டி காட்டியது எலிமினேசன் கார்டு இல்லை என்று கமல் கூற அரங்கமே அதிர்ந்தது.

மேலும் அழுது கொண்டிருந்த மோகன் வைத்தியா உடனடியாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சாண்டியிடம் சேர்ந்து குத்தாட்டம் போட்டார். இந்த வாரம் கமல் செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.