மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தர்ஷன்! வனிதாவை வச்சி செஞ்ச கெத்து! பைனலில் காத்திருந்த பக்கா சீன்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடனே வனிதாவுக்கு தர்ஷன் பதிலடி கொடுத்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷினி பிரிய விரும்பாமல் வீட்டு உறுப்பினர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்த முடிவினால் பொதுமக்களே சற்று கோபத்திற்கு ஆளாயினர். பிக்பாஸ் பட்டத்தை தர்ஷன் வெல்வார் என்று மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

மேலும் தர்ஷன் வெளியேற்றபட்டதற்கு ஷெரின் தான் காரணம் என்று வனிதா கூறிக்கொண்டு வந்தார். இதனால் ஷெரின் மிகவும் மனமுடைந்து போனார். இந்த குற்றச்சாட்டை தாங்கி கொள்ள இயலாமல் அவர் அழுதுகொண்டே இருந்தார். அவரை பலரும் தேற்ற முயன்றனர். இருப்பினும் அவர்களால் இயலவில்லை.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற தர்ஷன் ஷெரினிடம், "நான் வெளியானதற்கு நீ காரணம் இல்லை. என்றும் நீ காரணமாக மாட்டாய். யார் சொல்வதையும் நம்பிவிடாதே" என்று கூறினார்.

இத்தகைய வார்த்தைகள் நிச்சயமாக ஷெரினுக்கு ஆறுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர். மேலும் ஷெரினை கடுமையாக தாக்கி வந்த வனிதாவுக்கு பதிலடி கொடுப்பது போல் தர்ஷனின் பேச்சு அமைந்துள்ளதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.