பிக்பாஸ் காதலர்களுக்கு திடீர் நிச்சயதார்த்தம்! மாலை மாற்றி உற்சாகம்! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . தமிழைப் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே தொடர்ச்சியாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தன்னுடன் பங்கேற்கும் சக போட்டியாளர்களை காதலிப்பது ஒன்றும் புதிதல்ல. 

தமிழ் மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் முதல் சீசனில் பங்கேற்ற ஆரவ் மீது ஓவியா காதலில் விழுந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா ஆகியோரும் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கன்னட மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதிதா கௌடா ஆகியோர் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது திருமண பந்தத்தில் நுழைவதற்கு முற்பட்டுள்ளனர். அதற்கு முதல் படியாக தற்போது இவர்கள் இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களது திருமண நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

இதனைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.