பிக்பாஸ் 3 பைனல்! டிராபி + ஹீரோ வாய்ப்பு! தர்சனை நெகிழ வைத்த கமல்! கலங்கிய தாய்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆல்ரவுண்டர் விருது மக்கள் அனைவரையும் கவர்ந்த தர்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களில் சிறப்பாக விளையாடி அவர்களுக்கு தனித்தனிப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. கேம் சென்சார் எனும் விருது கவிஞர் கொடுக்கப்பட்டது. மிகவும் ஒழுக்கமானவன் என்கிற விருது சேரனிடம் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் நட்புடன் பழகி அதற்காக ஷெரினுக்கு விருது கொடுக்கப்பட்டது. அந்த வரிசையில் தர்சனுக்கும் கமல் விருது கொடுத்தார். பிக் பாஸ் வீட்டில் ஆல்ரவுண்டர் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் கமல் தனது படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தையும் தன்னிடம் மேடையில் வைத்துக் கொடுத்தார் கமல். இதனைப் பார்த்து தர்ஷனின் தாய் கண் கலங்க அதே போல் தர்சனும் மனம் கலங்கினார்.