பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களை கொண்டு துவங்கியது.
உள்ளாடை விவகாரம்..! அசிங்கப்படாதீங்க..! அசிங்கப்பட்டுறுவீங்க..! பிக்பாஸ் அபி கொடுத்த பதிலடி..!

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் நடிகை மதுமிதாவும் நடிகை அபிராமியும் போட்டியாளர்கள் ஆவர். நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர் உடன் நடைபெற்ற விவகாரத்தின் மூலம் தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் .
வெளியேறிய பின் அவர் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வண்ணம் இருக்கிறார். மதுமிதா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஒரு சில வாரங்களிலேயே அபிராமியும் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார் . இதற்குப் பின்பு அபிராமியை பற்றி மதுமிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைத்து விமர்சனம் செய்தார்.
அதாவது அபிராமி எப்போதும் உள்ளாடைகளை அணிவது கிடையாது , என்றும் சாக்ஷியும் அபிராமியும் சரியாக ஆடைகள் அணிய வில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். அபிராமி பாட்டிலை வைத்துக் கொண்டு அதற்கு டைபர் மாட்டி , இது எனக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை எனவும் பிக்பாஸ் வீட்டில் கூறிக்கொண்டு சுற்றி திரிந்தார் எனவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது மதுமிதாவின் இந்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு சமூக வலைத்தளத்தில் சரியான பதிலடி அளித்துள்ளார் அபிராமி. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமியும் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை பயன்படுத்தி தற்போது மதுமிதாவுக்கு பதிலடி அளித்துள்ளார். அதாவது "உங்களை உயர்த்திக் காண்பிப்பதற்காக ஏன் மற்றவர்களை அசிங்கப்படுத்திரிங்க " என்ற வசனம் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் ஒரு பிரபலமான வசனம் ஆகும் . இதை வைத்து தான் தற்போது மதுமிதா விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார் அபிராமி.
அபிராமியின் இந்த பதிவிற்கு மதுமிதாவின் பதிலடி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.