லாக் டவுனில் என் படுக்கை அறையில் நடப்பது என்ன? வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் பிக்பாஸ் நடிகை..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மீரா மிதுன், லாக் டவுனில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக கவர்ச்சி உடையுடன் நடனமாடி தனது படுக்கை அறையில் நடப்பது என்ன என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மீரா மிதுன். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாடலாகவும் இவர் பணிபுரிந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் போட்டியில் கால் பதித்த நாள் முதலே தன்னுடைய சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடுவதை தன் வாடிக்கையாக கொண்டிருந்தார். 

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சேரன் தன்னிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தாகவும் பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது வைத்தார். இதற்குப் பின்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தொடர்ச்சியாக பல வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

பொதுவாகவே இவருடைய வீடியோக்களை பார்த்து லைக் செய்பவர்களை விட திட்டி தீர்ப்பவர்கள் தான் அதிகம். அதாவது மீரா மிதுன் தற்போது புதிய வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். .

அந்த வீடியோவில் மீராமிதுன் தன்னுடைய படுக்கையறையில் ஆண் நண்பர் ஒருவருடன் கவர்ச்சிகரமாக தொப்புள் தெரிய உடையணிந்து மிக நெருக்கமாக கட்டியணைத்து ஆங்கில பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மீரான் மிதுனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் லாக் டவுனிலும் கூட உங்களுடைய அலப்பறை தாங்க முடியவில்லை என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.