அந்த மூன்று நாட்கள்..! மாதவிடாய் காலம்..! பெண்கள் பயன்படுத்தும் நாப்கீன்களுடன் பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம்! ஏன் தெரியுமா?

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜூலி, மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் உடன் போட்டோ ஷூட் நடத்தி அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.


தமிழகத்தில் மாணவர்களின் சக்தியை ஜல்லிக்கட்டு போராட்டம் வெளிக்கொண்டு வந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானது ஆரம்பித்தவர் தான் ஜூலி. இதனைத் தொடர்ந்து இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இந்த போட்டியில் பங்கேற்ற நாள் முதலே சக போட்டியாளர்கள் இடம் பொய்களை மட்டுமே பேசி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டார் ஜூலி.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் ஜூலியை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஜூலி ஏதேனும் பதிவு ஒன்றை வெளியிட்டால் அதனை பாராட்டுவதை விட தீட்டி தீர்ப்பவர்கள் தான் அதிகம். ஜூலி தற்போது அம்மன் தாயி, டாக்டர் எஸ். அனிதா, உத்தமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆக நடிகையாகவும் மாறிவிட்டார். நடிகையாக அவதாரம் எடுத்த பின்பு ஜூலி விதவிதமாக உடைகளை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் களை எடுத்து அதனை புகைப்படமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை ஜூலி தற்போது புதியதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஜூலி, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் உடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அவர் ரியோ என்ற நிறுவனத்தின் பொருட்களுக்கு விளம்பரம் செய்திருக்கிறார். இந்த போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், முதல் முறையாக நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள்.. பாராட்டத்தக்கது என்று கமெண்ட்டை பதிவு செய்திருக்கிறார். 

தற்போது ஜூலி வெளியீட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.