பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய ஷெரீன்! பரபரப்பு நிமிடங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது இடத்தைப்பெற்று ஷெரின் வெளியேறுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


பிக்பாஸ் சீசன்-3 மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இன்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாளாகும். பட்டத்தை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள் இடையே கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பட்டத்தை முகன் வெல்வார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். 

எப்படி இருந்தாலும் இன்று இரவு பிக்பாஸ்-3 சீசனின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். பிக்பாஸ் வீட்டில் தற்போதுள்ள 4 பேரில் ஷெரின் வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. அவரை தவிர்த்து முகென், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் பைனல்ஸுக்கு தேர்வாகியுள்ளனர்.

கருத்துக்கள் எப்படி இருந்தாலும் இன்று இரவு உண்மைகள் வெளியாகிவிடும். அதே சமயம் முதல் மூன்று இடங்களுக்குள் லாஸ்லியா, முகேன், சாண்டி இருந்தாலும் வெற்றியாளராக லாஸ்லியா தான் தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். இதற்கு வசதியாகவே ஷெரீனை வெளியேற்றி இருக்கிறார்களாம்.