பிக்பாஸ் எவிக்சனுக்கு பிறகு நேராக தர்ஷன் சென்றது இந்த இடத்திற்கு தான்..! எங்கு, ஏன் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன்  திரைப்படத்திற்கு சென்றிருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷினி பிரிய விரும்பாமல் வீட்டு உறுப்பினர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்த முடிவினால் பொதுமக்களே சற்று கோபத்திற்கு ஆளாயினர். பிக்பாஸ் பட்டத்தை தர்ஷன் வெல்வார் என்று மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட தர்ஷன் தற்போது ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். வெளியே செல்லும்போது காணப்படும் அவருடைய ரசிகர்களுடன் ஜாலியாக செல்பி எடுத்து கொள்கிறார். சமீபத்தில் அவர் நடிகர் சூர்யா நடித்து வெளியான காப்பான் திரைப்படத்திற்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தர்ஷன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு பொதுமக்கள் வியந்துள்ளனர்.