சிறையில் அடைக்கப்பட்ட பிக்பாஸ் கவின் தாயார்! முக்காடு போட்டுக் கொண்டு சென்ற பரிதாபம்! வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் புகழ் கவின் தன் தாயார் கைது செய்யப்பட்டதால் பிக்பாஸிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் வசித்து வருகிறார். இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் கவினின் தாயார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. 

அதாவது, திருச்சி மாவட்டம் கே.கே. நகரில் கவினின் தந்தையார் அருணகிரி 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை அனுமதியின்றி சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர். இந்த கம்பெனியில் மொத்தம் 34 பேர் பணத்தை கட்டினர். இவர்கள் யாருக்கும் பணத்தைத் திருப்பித்தராமல் இருந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 33 லட்சம் பணத்தை திருப்பித்தர வேண்டி திருச்சி பொருளாதார நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் 31 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் இரு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பளித்த நீதிபதி, "குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 5 சதவீத வட்டியில் 55 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத்தவறினால் குற்றவாளிகளின் சொத்தை பறிமுதல் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இரவோடு இரவாக நீதிமன்றத்த்ல் இருந்து கவின் தாயார் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரோடு சிறை தண்டனை பெற்ற கவின் குடும்பத்தினரும் சென்றனர். அப்போது முகத்தை முக்காடு போட்டு மூடியபடி கவின் தாயார் மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.