வார் ரூம்..! படு மாஸ் டீம்..! ஸ்கெட்ச் போட்டு கொரானாவுக்கு எதிராக களம் இறங்கிய அதிகாரிகள்! ஓட ஓட விரட்டுவது உறுதி! எப்படி தெரியுமா?

டெல்லியில் குரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக தனி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

இந்தியாவில் மொத்தம் 31 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் கிட்டத்தட்ட 3 பேருக்கு இந்த நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் அதிகம் தெரிவதாக கூறப்படுகிறது. இந்த நோய் தொடர்பான வசதிகளை செய்துதர டெல்லியில் தனி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவை சேர்ந்த மருத்துவர்கள் 24 மணி நேரம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்த பிறருக்கு கால் செய்து வைரஸ் குறித்த அறிகுறிகள் தெரிகிறதா என்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் 11 மாவட்டங்களில் முகாமிட்டு கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இந்த நோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காக ஒரு மிகப்பெரிய வார் ரூம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் குழுக்களாக பிரிந்து டெல்லி விமான நிலையத்திலும் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் தொடக்கத்திலிருந்து டெல்லி விமான நிலையத்தில் பயணம் செய்தவர்களிடம் குருநாதா வைரஸ் பாதிப்பு குறித்து கேள்விகளை அழைப்பு விடுத்து கேட்டு வருகின்றனர்.

இத்தகைய முயற்சிகளின் மூலம் டெல்லியில் கொரானா வைரஸ் பரவுவதை  கட்டுப்படுத்த இயலும் என்று டெல்லி அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.