பிக்பாஸ் டிராபியை தூக்கிய லாஸ்லியா! கமல் வெளியிட்ட வீடியோவில் கசிந்த உண்மை!

பரபரப்பாக நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , பைனலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று மாலை நடைபெறுவதால் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று இன்று மாலை தெரிந்துவிடும்.

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சற்றுமுன் வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன், அதிக வாக்குகளைப் பெற்ற வெற்றியாளர் யார் என்று அறிவிக்கும் நாள் இன்று என்று கூறுவது போலவும், அப்போது பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் டிராபியை லாஸ்லியாவின் கைகள் வந்து எடுப்பது போல அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் டைட்டிலை லாஸ்லியா தான் வென்றுள்ளார் என்பது இந்த ப்ரோமோ வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.